• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ரூ 40 லட்சம் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது..,

BySeenu

Jul 3, 2026

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூபாய் 40 லட்சம் மாத்திரைகளுடன் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையை அடுத்த கோவை புதூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக 5 பேர் இருசக்கர வாகனத்தில் சுற்றுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் ஐந்து பேர் சென்றனர். உடனே காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை புதூரை சேர்ந்த ராகுல், பொன்னேராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராம் பிரசாத், தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ், செட்டி வீதியைச் சேர்ந்த பாலாஜி, ஹைவேஸ் காலனி ஜான் ஜோசப் என்பது போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், மும்பையில் இருந்து கோவைக்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்பு உள்ள 13 ஆயிரம் போதை மாத்திரைகள் 2.5 கிலோ உயர் ரக கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் ? தொடர்பு உள்ளது. என்பதை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.