• Mon. Apr 28th, 2025

மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்

Byவிஷா

Apr 14, 2025

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025ம் ஆண்டு ஆண்டுக்கான விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வருகிறது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதனை மீன்பிடி தடைக்காலம் என அழைப்பார்கள். இருந்த போதிலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை தவிர சிறிய ரக நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில் எந்தவித தடையும் இல்லை.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையானது விசைப்படகுகளுக்கு மட்டுமே. ஆனால், நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள். மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.