• Thu. Apr 25th, 2024

அமைச்சர் மனோ தங்கராஜிடம் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மனு

பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் மனோதங்கராஜிடம் கன்னியாகுமரி மாவட்ட மினவபிரதிநிதிகள் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம் மாவட்ட தலைநகர் நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் செயல்படுத்தவும் உள்நாட்டு மீனவர்களுக்கு( நீர் உயிரின வளர்ப்பு) மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் நாகர்கோவிலில் அமைத்து மீனவர்களுக்கு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க கேட்டும் மறுசீரமைப்பு என்ற பெயரில் மீனவருக்கு விரோதமான முறையில் திட்டமிடும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அவரின் தன்னிச்சையான செயல்களை மறுபரிசீலனை செய்திட கேட்டும்‌. மீன்பிடி படகுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பதை கைவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தவும்
மீனவர் சேமிப்பு நிவராண திட்டம் போன்ற நிவராணங்களில் கையெழுத்தை காரணம் காட்டி மீனவர்களை நிவராணங்கள் பெற முடியாத வகையில் அலைக்களிப்பதை தவிர்க்கவும் வேண்டும் என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் மனோ தங்கராஜை கன்னியாகுமரி மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்,இதில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பி.அலெக்சா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *