• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மீனவர்களே உஷார் ! வங்க கடலில் கனமழைக்கு வாய்ப்பு …

தமிழகத்தில் வளிமண்டல் மேழலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்க நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்க கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும்,
ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்பட வட மாநிலங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் தெரிவித்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் வங்க கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும் எனவும் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.