முள் அதிகமில்லா மீன் -1ஃ4கிலோ,
பெரியவெங்காயம்,தக்காளி-2 பொடியாக நறுக்கியது,
இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்,
மிளகாய் தூள்,உப்பு-தேவையான அளவு,
நல்லெண்ணெய் -100 மிலி,
மீனிலிருந்து சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து பொரித்தெடுக்கவும், அந்த எண்ணெயிலேயே வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் நீர் விட்டு மசால் வாடை போனதும் இறக்கும் நேரம் மீன் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும். இந்த கிரேவி சாதம், இட்லி, தோசை போன்றவைகளுக்கு அருமையாக இருக்கும்.