கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி அதிமுகவின் உட்கட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு 2.12.2021 அன்று வெளியிடப்பட்டது. வேட்பு மனுக்கள் 3.12.2021, 4.12.2021 ஆகிய தேதிகளில் தலைமைக் கழகத்தில் பெறப்பட்டன. அதில், ஓ. பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும், வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் போட்டியிட வேண்டி, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் வேட்பு மனுக்களை அளித்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் 5.12.2021 அன்று, அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாகப் பரிசீலனை செய்யப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும் போட்டியிட வேண்டி ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதால், அவர்களுடைய மனு கழக சட்ட திட்ட விதி – 20(அ : பிரிவு-2ன்படி சரியாக உள்ளதாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு ஒருமனதாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் உள்கட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, விருதுநகர் கிழக்கு, மதுரை மாநகர்,மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம்மாநகர், புறநகர் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல், நடைபெறவுள்ளது.
இதன்படி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்டக் கழக அவைத் தலைவர் விஜயகுமார் அவர்களின் அறிவுரையின்படி, கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.தர்மலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் விருதுநகர் கிழக்கு ஒன்றிய பகுதி உட்பட்ட ஊராட்சிகளுக்கான கழக அமைப்பு தேர்தல் ரோசல்பட்டி தோல்ஷாப் ஸ்டாப்பில் அய்யனார் S V கிருஷ்ணமூர்த்தி திருமண மஹாலில் வைத்து, 13.14. தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதுசமயம் விருதுநகர் கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஊராட்சியில் கிளைச் செயலாளர்கள் போட்டியிட விருப்பமுள்ள கழகத்தின் உடன்பிறப்புகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கண்டிப்பாக எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.