• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் தீ தொண்டு நாள் விழா மற்றும் நீத்தார் நினைவு தினம்

ByI.Sekar

Apr 18, 2024
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைகள் சார்பாக தீ தொண்டு நாள் விழாவும் தீயணைப்புத் துறையில் இறந்தவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் கண்ணன் முன்னிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆண்டிபட்டியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்,மின்சாரத்தில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க வேண்டிய வழிவகைகள், கேஸ் அடுப்பு மூலம் ஏற்படும் விபத்துகளை தடுப்பது குறித்து பிட் நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்.இந்த விழிப்புணர்வு பணிகள் கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.