• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள புகைப்பட கலைக்கூடத்தில் தீ விபத்து..,

ByRadhakrishnan Thangaraj

Jul 24, 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள விமல் என்பவர் நடத்தி வரும் விமல் (ஸ்டுடியோ )புகைப்பட கலைக்கூடத்தில் கம்ப்யூட்டரில் மின் கசிவின் காரணமாக தீ பிடித்து புகைப்பட கலைக்கூடத்தில் வைத்திருந்த விலை உயர்ந்த உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கடையில் பணி புரியக்கூடிய கடை ஊழியர்கள் டீ குடிப்பதற்காக கடையை அடைத்து விட்டு சென்றதால் உயிர் சேதம் ஏற்படாமல் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.