• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Jul 23, 2026

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,

தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்டாரத் தலைமையகங்களில்
இதன் ஒரு பகுதியாக, இராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் க. புஷ்பமலர் தலைமை . மாவட்ட துணைத் தலைவர் தொ. கனகதியம்மாள் முன்னிலை வகிக்கிறார். வட்டாரச் செயலாளர் சு. உதயகுமார் வரவேற்புரை. மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கா. மாரியப்பன், பி. இராஜேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். வட்டாரப் பொருளாளர் பா. சாந்தி நன்றியுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்,

அரசாணைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.