அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசுகையில் இபிஎஸ் -ஓபிஎஸ்
சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர்.
சட்டசபையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) பேசும்போது, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 32 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எங்கள் தலைமை கழகத்தில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. நாங்கள் அதற்கு முன்பே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை என்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அன்று திட்டமிட்டு சிலர் புகுந்து தாக்கியதாக கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் எழுந்து அன்று நடந்த சம்பவம் வேதனையளிக்க கூடியது. நாங்கள் நிராயுதபாணியாக நின்றோம் என்று விவரித்தார். வன்முறையாளர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார் நடந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.