மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறவிருப்பதால், அது மெட்ரோ இயக்குநர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் விடுதியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டம் ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரிவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இயக்குனர் அர்ஜுனன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை இருக்கக்கூடிய முக்கியமான சந்திப்புகளில் ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர்களுடன் இணைந்து கள ஆய்வு பணியை மேற்கொண்டார்.