தமிழ்நாடு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு சார்பாக உணவின் புரதச்சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் மருத்துவமனைகளில் பணிபுரியும் உணவு வல்லுனர்கள் மற்றும் பண்ணை கோழி விவசாயிகள் குழுவின் உறுப்பினர்கள் உட்பட பேர் கலந்து கொண்டனர். இது குறித்து பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு ஆலோசகர் ராம்ஜி ராகவன் கூறியதாவது :
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் என்னும் மாவு சத்தை குறைத்து புரதச்சத்தை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக புரதச்சத்து பிராய்லர் கோழியில் அதிகமாக உள்ளது.
மற்ற கறிகளை விட பிராய்லர் கோழி விலையும் குறைவு என்பதால் பிராய்லர் கோழி கறியை வாங்கி உண்ணலாம். பிராய்லர் கோழி கறி மற்றும் முட்டை பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் எதிர் மறையான கருத்தை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்.