
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திமுகவின் உறுப்பினர்களுக்கு வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கலைஞரின் 102_வது பிறந்த தினத்தின் அடையாளமாக 102 இடங்களில் தமிழகம் பகுதிகளில் நடந்த வேண்டும் என்று அறிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு படி. குமரி மாவட்டம் கிழக்கு, மேற்கு என திமுக மாவட்ட செயலாளர்கள் விழா நடத்தினார்கள்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் தலைமையில். குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக, கலைஞரின் 102_து பிறந்த நாள் விழா.

கன்னியாகுமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை பாதத்தில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மேயரும் ஆன மகேஷ் தலைமையில் நடைபெற்ற கலைஞர் 102_ வது பிறந்த நாள் விழா வாழ்த்துகளை தெரிவித்த மேயர் மகேஷ். கலைஞரின் 102வது பிறந்த நாள் அடையாளமாக. குமரிக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் 102 பேர்களுக்கு சிறிய வடிவத்தில் ஆன திருவள்ளுவர் சிலையை நினைவாக வழங்கினார்.

திருப்பத்தூரில் இருந்து வந்திருந்த சகோதிரிகள் மேயரிடம் இருந்து திருவள்ளுவர் சிலையை மகிழ்ச்சி உடன் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஃப்.எம். ராஜரத்தினம், துணைமேயர், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மற்றும் திமுக கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டார்கள்.
