திருவள்ளூர் பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய உறுதுணையாய் இருந்த வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 16 வது வார்டிற்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி சிலம்பரசன் என்பவரின் மனைவி மணிமாலா என்பவர் சுயேட்சையாக 337 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணி, புரட்சிபாரதம் இரட்டை இலை சின்னத்தில் லதா என்பவர் 142 வாக்குகளுடன் இரண்டாம் இடமும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வினோபா 140 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
வெற்றி பெற்ற இவருக்கு விஜய் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்களித்த மக்களுக்கு வீடுகள் தோறும் சென்று நன்றி தெரிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். பொன்னேரி நகராட்சியாக மாறி முதல் முறையாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகி வெற்றி பெற்றிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்களர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!
