
சிந்தனைத்துளிகள்
வாழ்க்கை மற்றும் மந்திரச் சொற்கள்…!
மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
- போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
- நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
- உடைந்தால் என்ன? வேறு வாங்கிவிட்டால் போச்சு.
- பஸ்ஸ{ போயிடுச்சா, அதனால் என்ன? அடுத்த பஸ் இருக்கு, இல்லையா?
- பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
- சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
- அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான்.அதையெல்லாம்
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பொழுதுதான் உனக்கு நிம்மதி. - இதெல்லாம் சிறிய விஷயம். இற்காகவா கவலைப்படுகிறது…
- கஷ்டம் தான் … ஆனால் முடியும்.
- நஷ்டம் தான் … ஆனால் மீண்டு வந்துவிடலாம்.
- இதில் விட்டால் மற்றொன்றில் எடுத்துவிட மாட்டேனா?
- விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
- விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
- உட்கார்ந்து கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
- இவன் இல்லை என்றால் வேறு ஒருவன் இல்லையா?
- இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லியா?
- இப்பவும் முடியவில்லையா? சரி. மீண்டும் ஒரு முயற்ச்சி…
- இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசித்தால் வழி தெரியுமே.
- முடியுமா என்று நினைக்காதே. முடியணும் என்று நினை.
- கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
- அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
- விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதற்க்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
- திரும்பத் திரும்ப அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
- சும்மா யோசித்துக்கொண்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டென்று
வேலையை ஆரம்பி. - ஆஹா, இவனும் அயோக்கியன் தானா?
சரி, சரி. இனிமேல் எல்லோரிடமும் நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். - உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்? - ஊரில் ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
- கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
- எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
- அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
- அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
- நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்தைக் கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே,
வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்....
முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.
- காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்…மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் … Read more
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டுகிராம மக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் காலாண்டு தேர்வு … Read more
- அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற ஊழியர்கள் போராட்டம்…பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு … Read more
- காரியாபட்டியில் பஸ் நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது…விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையத்துக்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் மதிப்பீட்டில் … Read more
- மேலக்காலில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..!மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி … Read more
- பாஜக.வை விமர்சிக்க வேண்டாம்… அதிமுக தலைமை அறிவுறுத்தல்..!அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக.வை விலக்கி உள்ள நிலையில், பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக … Read more
- திடீர் உடல்நிலைக்குறைவால் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி..!
- ஊராட்சி வரி செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்..!ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு. க. … Read more
- பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை. – எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.இது … Read more
- தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 63,000 … Read more
- தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பும் அமலாக்கத்துறை..!தமிழகத்தில் மீண்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழகத்தில், சென்னை, … Read more
- தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை … Read more
- சித்தா திரை விமர்சனம்!!S. U.அருண்குமார் இயக்கத்தில் எடாக்கி என்டர்டெயின்மென்ட் சித்தார்த் தயாரித்து அவரே நடித்து வெளிவந்த திரைப்படம்”சித்தா” இத்திரைப்படத்தில் … Read more
- தமிழகத்தில் டெங்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது…கடந்த காலங்களை விட டெங்கு தமிழகத்தில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும். … Read more
- மியாவாக்கி காடு அமைக்கும் பணிகளை – கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைத்தார்…விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பசுமை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சிவகாசி – திருவில்லிபுத்தூர் … Read more
