சிந்தனைத் துளிகள்
• இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல,
அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே!
• ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால்,
நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘.
• எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்
ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்
அவர்கள் தாம் தம் வாழ்வில்
புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
• தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால்
எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்;
ஆனால் எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக
மாற்றுபவன் எவனோ அவனே ஜெயிப்பான்!
• மன உறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள்.
அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காக்கும்..!