

சிந்தனைத் துளிகள்
• பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை..
பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை
• நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது..
அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்.
• வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட..
வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..!
• படித்தவனிடம் பக்குவம் பேசாதே.
பசித்தவனிடம் தத்துவம் பேசாதே..
• மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை,
மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!!
• தேங்கிக் கிடக்கும் குட்டைதான் கல்லெறிந்தால் கலங்கும்.
ஓடும் நதி கலங்குவதில்லை.
இயங்கிக் கொண்டே இரு.
எந்தச் சோதனையும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது..!
