• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 9, 2022

சிந்தனைத்துளிகள்

வெற்றி உன் உருவத்தில் அல்ல உன் மனதில் துணிவிருக்கும் வரை
உன் வெற்றியை யாராலும் தட்டிப் பறித்திட முடியாது.

பிறர் கூறும் குறைகளைக் கண்டு வருந்தாதீர்..
நிறையுடையவர்களிடம் என்றும் குறை கூறும் பழக்கம் இருந்ததில்லை.

இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்
தவறு என்ற கணக்கில் சேராது.. அதன் பெயர் சாமர்த்தியம்.

புதிதாய் புண்ணியத்தை தேடுவதை விட்டுவிட்டு,
செய்த தவறுகளை சரி செய்து பாவத்தை துடைத்தெறியுங்கள்.

உன் வாழ்வில் யார் வந்தாலும் போனாலும் இறுதிவரை
உன்னோடு நான் தான் என்கிறது தனிமை.

முட்களையும் ரசிக்க கற்றுக் கொள்..
வலிகளும் மறந்து போகும்.