• Thu. Dec 12th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 15, 2022

சிந்தனைத்துளிகள்

• ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.
அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்
நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

• சரி எது..? பிழை எது..? என எம்மால் சிந்திக்க முடிந்தால்
மற்றவர்களின் ஆலோசனைகள் எமது வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படாது.

• நாம் வாழும் வாழ்க்கையில் அனைவருக்கும் துன்பங்கள் வரும்.
துன்பங்களும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை இல்லை.

• துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும்
எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
துன்பங்களை கண்டு துவண்டு விட கூடாது.
அனைத்திலும் வெற்றி அடைவதற்கான ரகசியம் விடா முயற்சி

• வெற்றி எனும் அர்த்தத்தை இலகுவில் அடைந்து விட முடியாது.
ஆனால் விடா முயற்சியம் கடின உழைப்பும் நிச்சயம் வெற்றியை தேடி தரும்.