திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் செல்லும் அபாயம் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில் தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்துவதால் தினந்தோறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் வருவதாகவும் பொதுமக்களையும் விவசாயிகளையும் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரக்கன்றுகள் நட வேண்டும். மரத்தை வெட்டி பத்து மரக்கன்றுகள் நட்டிருந்தால் தற்போது கொடைக்கானல் மலை முழுவதும் சோலைக்காடாக மாறி இருக்கும்.தினந்தோறும் வத்தலகுண்டு வன பகுதிகளில் லாரி லாரி ஆக மரங்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. வனத்தில் உள்ள வன விலங்குகள் தொடர்ந்து மக்கள் உள்ள பகுதிகளுக்கு வந்து தாக்கத் துவங்கியுள்ளது .
மேலும் வனதுறை அதிகாரிகள் மெத்தனமாக இல்லாமல் வனவிலங்குகளை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் அழிவை நோக்கி செல்லும் மலைகளை மரங்களை காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் மலைகளை நம்பி வாழும் தரைத்தள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.





