• Mon. Mar 17th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 9, 2023

சிந்தனைத்துளிகள்

ஐஸ்வர்யம்

ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல
வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம் !
வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம் !
எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம் !
அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம் !
மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை ஐஸ்வர்யம் !
பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம் !
இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம்
பவுர்ணமி தினத்தில் நிலவு ஐஸ்வர்யம் !
உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம் !
பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம் !
இயற்கை அழகு ஐஸ்வர்யம் !
உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம் !
அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம் !
புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம் !
குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம் !
கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் !
ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம் !
ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல !
கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம் !
மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்…!
நம்மை சுற்றி நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யம்…
எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன்
போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள் ஐஸ்வர்யம்…!!!
கணவன் மனதில் ஒரு பொருளை நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான மனைவி ஐஸ்வர்யம்…!!!
ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை அவர்கள் மறக்காமல் மதிப்பது ஐஸ்வர்யம்…!!!
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கை இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது ஐஸ்வர்யம்…!!!
பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில் அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் ஐஸ்வர்யம் !
பேரப்பிள்ளைகள் பெறுவதும், அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் ஐஸ்வர்யம் !
நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம் முடிவதும் ஐஸ்வர்யம் !