• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 1, 2023

சிந்தனைத்துளிகள்

ஓர் இரும்பை முழுமையாக அழித்தொழிக்கும் சக்தி இவ்வுலகில் எதுவுமே இல்லை அதன் துருவைத் தவிர. அத்துரு அந்த இரும்பிலிருந்து உருவாகின்றது. அதைப் பலப்படுத்தும் அந்த மூலக்கூறுகளைக் கொண்டே அது பலம் இழக்கின்றது. எவராலும் அசைத்து விட முடியாத அந்த இரும்பை துருவாக மாற்றி காற்றில் கரைகின்றது.
இது போலவே உங்கள் மனதினுள் எழும் எதிர்மறையான எண்ணங்களும் அதை உங்கள் மனதினுள் மிகச் சாதாரணமாகத் தோன்றும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். உனது பலத்தைப் பலவீனமாக்கும், தன்னம்பிக்கையைத் தாழ்வு மனப்பான்மை ஆகும். உனது மனம் எங்கும் பயத்தையும் சோம்பேறித்தனத்தையும் விதைக்கும். உன்னை ஏதோ ஒரு மூலையில் முடக்கிப் போட்டு விடும். அதன் பின் உனது வாழ்வையே இருளாக்கிவிடும்.
நண்பா நீ நம்புகிறாயோ இல்லையோ உன்னுள் ஒரு வெற்றியாளன் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பான். அவன் இன்று வரை தனது உண்மையான பலத்தை அறிந்திருக்கவில்லை. தனது திறமைகளையும் ஆளுமைகளையும் அறிந்திருக்கவில்லை. அவன் தாழ்வு மனப்பான்மை எனும் இருளில் மூழ்கி தனது சுயத்தை இழந்து உறங்கிக் கொண்டிருக்கின்றான்.
அவ் உறக்கத்தை இக்கணமே நீ கலைத்துவிட வேண்டும். அவனைச் சூழ்ந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் எதிர்மறையான எண்ணங்களையும் விரட்டிவிட்டு தன்னம்பிக்கை என்ற ஒளியைக் கொண்டு அவனுக்கு வழிகாட்டவேண்டும். நிச்சயம் நீ எண்ணுவதை விட அந்த வெற்றியாளன் திறமை மிக்கவன். அறிவு மிக்கவன். என்று அந்த அறிவுடன் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சேர்ந்து கொள்கின்றதோ அன்றிலிருந்து அவரது வெற்றிப்பயணம் ஆரம்பமாகிவிடும். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும் விரும்பியதெல்லாம் நடக்கும். அதற்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் தோல்வி பயத்தில் துவண்டு கிடக்கும் அவ்வெற்றியாளனுக்கு தன்னம்பிக்கை ஊட்டி அவனைத் தூக்கி விடுவது மட்டுமே அதை இன்றே தொடங்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *