சிந்தனைத்துளிகள்
தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,
கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,
எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,
வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழும் வாழ்க்கை தான் கிடைத்திருக்கிறது.
இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார் இப்படித் தான் நகருகிறது.
மனிதனுக்கு நிம்மதி இல்லாமைக்கு ஒரே காரணம்
அமிர்தமே கிடைத்தாலும் அதைவிட சிறப்பான ஒன்று
இருப்பதாக மனம் நம்புவதால் தான்.
வாழ்வில் நிஜத்தை தேடுங்கள்,
நிஜமென்று நம்புவதையெல்லாம் தேடாதீர்கள்.