

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்த்து
இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதுபோல் இன்று மாலை தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வந்தது.


தேனி, அல்லிநகரம், வடபுதுபட்டி, அரண்மனை புதூர் உள்ளிட்ட தேனி நகரின் பல்வேறு பகுதிகளில் மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகள், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

