• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் நகராட்சி ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும்- சக்கரபாணி உறுதி..,

ByS.Ariyanayagam

Apr 15, 2026

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் உட்பட பலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்தார்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ட்பட்ட காந்திநகர், திடீர்நகர், வள்ளுவர் நகர் பிரிவு, காளியம்மன் கோவில், விஸ்வநாதன் நகர்,சாஸ்தா நகர், தும்மிச்சம்பட்டி, தும்மிச்சம்பட்டிபுதூர், நாயக்கனூர், மேட்டுப்பட்டி, சத்யாநகர், திருவள்ளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுகசார்பில்

வேட்பாளர் சக்கரபாணி வாக்குகள்சேகரித்து பேசியதாவது:
நகராட்சி பகுதியில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் 25 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, லெக்கையன்கோட்டை முதல் அரசப்பிள்ளைபிள்ளை பட்டிவரை தரம் உயர்தப்பட்ட சாலைகள், நகராட்சி பகுதியில்ரூ.130 கோடியில் காவிரி கூட்டிக் குடிநீர் திட்டம், ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் ஒளிரும் மின் விளக்கு உங்களுடன் கூடிய நம்ம ஒட்டன்சத்திரம் செல்பிபாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பு இருந்த ஒட்டன்சத்திரம் வேறு தற்போது இருக்கும் ஒட்டன்சத்திரம் வேறு என்ற நிலையில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தின் வளர்ச்சியை கண்டு கேரள மாநிலத்தில் இருந்து காய்கறி வாங்குபவர்கள் மிரண்டு பிரமித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும். அதற்கான அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்வார்.

மேலும் முதல்வர் அறிவித்துள்ள முதியோர், கைம்பெண்கள் ஓய்வூதியம் ரூ. 2000, மகளிர் உரிமை தொகை 2000, நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்குரூ. 3500, கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ஆக உயர்வு, ரூ 10,000 கோடியில் கிராமப்புற சாலைகள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் வேளாண்மை கல்லூரி , ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல் பயன்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்,என உறுதி அளித்தார்.