• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் செல்போன் வைப்பதில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக தமிழகத்தில் முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது அறிவித்திருந்தது

இதன் காரணமாக இன்று முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது கைபேசியை பாதுகாப்பதாக வைப்பதற்கு ஒரு மணி நேரமாக நீண்ட வரிசையில் நின்று வருகிறார்கள்

இது குறித்து கோயில் நிர்வாகத்திலும் கேட்ட போது சர்வர் (இணையதளம்) பிராப்ளம் இருப்பதால் நாங்கள் இதற்கான கட்டணத்தை ரசீது எடுக்க முடியாமல் உள்ளோம் என தெரிவித்தார்கள்

இதற்கிடையில் பக்தர்கள் நாங்கள் ஒரு மணி நேரமாக நிற்கிறோம் இங்கேயே ஒரு மணி நேரம் ஆகிவிட்டால் நாங்கள் எப்படி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வோம் என கூறி சீக்கிரமாக எங்களது செல்போன்களை பெற்று ரசிது தருமாறு கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதனால் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள் இது குறித்து கோவில் நிர்வாகிகளும் கேட்டபோது இணையதள சேவை கிடைக்கவில்லை ஆகையால் ரசீது எடுக்க முடியாமல் நேரமாகிறது என தெரிவித்துள்ளார்கள்.