• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்றக் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புளிய மரமானது வடக்கு தெரு பகுதியில் பொதுமக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் உள்ளது மிக பழமை வாய்ந்ததும் 100 ஆண்டுகளுக்கு மேலானதுமான இந்த புளியமரம். கடந்த வாரம் அதிகாலை 4 மணி அளவில் மரத்தின் ஒரு பகுதி திடீரென விழுந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக இந்த புளிய மரத்தின் அடியில் மாலை நேரங்களில் இந்த பகுதி பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதும் குழந்தைகள் அந்த பகுதியில் விளையாடுவதுமாக உள்ள நிலையில் அதிகாலையில் மரம் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மரத்தின் ஒரு பகுதி விழுந்த நிலையில் மீதியுள்ள பகுதி எலும்பு கூடாக காட்சி தருகிறது மேலும் மீதி உள்ள மரமும் எப்போது கீழே விழும் என்ற சூழ்நிலையில் உள்ளது இந்த நிலையில் முள்ளி ப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலரிடம் மரத்தை அப்புறப்படுத்த கூறிய போது அவர் வாடிப்பட்டி தாசில்தாரிடம் சென்று அனுமதி வாங்கி வரச் சொன்னதாக கூறப்படுகிறது. வாடிப்பட்டி தாசிலாரிடம் சென்ற நிலையில் இன்று நாளை என அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு மேலான நிலையில் மரத்தின் கிளைப் பகுதிகள் கீழே விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆகையால் பெரும் விபத்துஏற்படும் முன் சேதமடைந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.