
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஸ்டாராக உயர்ந்துள்ளார் பிரபாஸ். இவரது நடிப்பில் முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சம் என்ன வென்றால், இந்த படத்தின் டிரெய்லரை வெளியிடப்போவது ரசிகர்கள் தானாம்.
இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பிரபாஸின் ரசிகர்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம். இந்திய சினிமாவிலேயே இத்தகைய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
