ஜூலை 28ஆம் தேதி வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்பட கதாநாயகன் லெஜெண்ட் அருள்சரவணன் பெயரில் ரசிகர்மன்றம். மதுரையில் மக்களின் பொழுதுபோக்கிற்கு தெருக்கூத்து, மேடை நாடகங்கள் மட்டுமே என இருந்த காலம் தொடங்கி, ஊமைப்படம், பேசும் படம் என மாற்றம் கண்ட எல்லா காலங்களிலும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் மதுரை மக்கள் எப்போதும் முதல் இடத்தில் இருப்பார்கள். திரைப்படங்கள் வரத் தொடங்கி தியாகராஜ பாகவதர், டி.ஆர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன்,விஜயகாந்த், தற்போது விஜய், அஜீத்குமார்,விக்ரம், சூர்யா, தனுஷ், என நூற்றுக்கணக்கான நடிகர்கள் வந்தாலும் அனைவரின் படங்களையும் பார்த்து ரசிப்பது மட்டுமில்லால் அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றங்களைத் தொடங்கி போஸ்டர் ஒட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்துவதில் மதுரைக்காரர்களை மிஞ்ச முடியாது. நடிகர்கள் என்று மட்டுமல்ல, இயக்குநர், நடிகைகள், வில்லன் நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் தொடங்க சொந்தக்காசை செலவு செய்யும் பாசக்கார பயலுகள். மதுரையில் சினிமா தொடங்கிய காலம் தொட்டு வாழையடி வாழையாக வந்து கொண்டு தான் உள்ளார்கள் புரூஸ் லீ, ஜாக்கி ஜான்,அர்னால்ட், சில்வர் ஸ்டோலன் போன்றோர்கள். அதன்படி தற்போது லெஜெண்ட் அருள்சரவணன்-க்கும் மதுரையில் ரசிகர்மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.