• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

ஆக.12ல் வெளியாகும் கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படம்..!

Byவிஷா

Jul 30, 2022

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கொம்பன் முத்தையா இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கும் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக அந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால், திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை. இதன் காரணமாக கோப்ரா திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை விருமன் பட குழுவினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கான செய்தி 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. அதை தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வரும் 3-ம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே கார்த்தி, முத்தையா கூட்டணியில் வெளிவந்த கொம்பன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்த வெற்றி விருமன் படத்திலும் தொடரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.