

கல்லூரி மாணவர்கள் கோஷ்டி சண்டை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கல்லூரி மாணவிகள் கோஷ்டி சண்டை பார்த்திருக்கீற்களா… அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரங்கேறியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் நேற்று கல்லூரி முடிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்துகொண்டிருந்தனர். அப்போது இருதரப்பு மாணவிகளுக்கிடையில் பஸ் நிறுத்தத்திலேயே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் தாக்கி குடுமிப்பிடிச்சண்டையில் ஈடுபட்டனர். சுற்றும் முற்றும் ஆயிரம் பேர் இருந்தும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தாறுமாறாக முடியை பிடித்து அடித்துக்கொண்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
