தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 93 வருடம் இந்த தேரோட்டம் நடந்த நிலையில் முதல்முறை இப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர் தீ பிடித்ததை நேரில் பார்த்த மக்கள் பலர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
தேரோட்டத்திற்காக எப்போதும் போல் மின்சார கம்பிகளை மக்களை உயர்த்தி உள்ளனர். சாலை ஓரம் இருக்கும் மின்சார கம்பிகள் தேரில் படாத வண்ணம் உயர்த்தி உள்ளனர். ஆனால் நெடுஞ்சாலையில் உள்ள மின்சார கம்பியை உயர்த்தவில்லை.இதனால் இந்த முறை தேரை திருப்பும் போது, அது சரியாக மின்சார வயரில் உரசி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது \
மேலும் தஞ்சையில் களிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து இருக்கிறது. சாலையில் ஆங்கங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால் தேரை இழுக்கும் போது மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இழக்க முடியவில்லை. தண்ணீர் இல்லாத பக்கங்களில் இருந்தவர்கள் மட்டும் தேரின் வடத்தை பிடித்து இருந்துள்ளனர். சாலையில் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் இருந்த மக்கள்.. தேரை தொட முடியாமல் கொஞ்சம் தள்ளி நின்று உள்ளனர்.
. முன் பக்கம் இருந்த 25 பேர் மட்டுமே தேரை தொட்டபடி தேரை நகர்த்திசென்றுள்ளனர். இவர்கள்மீது தான் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு பலியாகி உள்ளனர்.
பின்பக்கம் அதிர்ஷ்டவசமாக தேரை தொடாமல் இருந்த 30 பேர் மின்சாரம் தாக்காமல் தப்பித்தனர். அந்த சேறு, தண்ணீர் மட்டும் அங்கே இல்லை என்றால் பலி எண்ணிக்கை 40 வரை கூட சென்று இருக்கும். மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இதுவரை 93 வருடம் இந்த தேரோட்டம் நடந்த நிலையில் முதல்முறை இப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு ஏற்பட்டுள்ளது. தேர்திருவிழாவில் பலர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.