தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு அரசியக் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் உயர் அழுத்த மின் கம்பத்தில் தேர் உரசி தீப்பற்றியதில் தேரை வடம் பிடித்து இழுத்த 11 பேர் உயிரிழந்தனர்.
பிரதமர் மோடியும்தனது இரங்கலை தெரிவித்திருப்பதோடு ரூ2 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.அதேபோல உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.
இந்த விபத்து குறித்து தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் தமது இரங்களைதெரிவித்து வருகின்றனர்
எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தஞ்சாவூர்,களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்விட்டரில்
, “தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி!!” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் பதிவில்,

“தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்! ” என பதிவிட்டு உள்ளார்.
சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில்,

“தஞ்சை,களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியடையவைக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். இது போன்ற திருவிழாக்களின்போது சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்,

“தஞ்சாவூர் மாவட்டம்,களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை சோகம்குறித்து மேலும் பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்துவருகின்றன.
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […]