• Tue. Apr 22nd, 2025

பப்புவாநியூகினிவா நாட்டில் முகநூலுக்கு தடை

Byவிஷா

Mar 27, 2025

முகநூல் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில், பப்புவா நியூ கினிவா நாட்டில் பேஸ்புக் தளத்திற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று முகநூல் எனப்படும் பேஸ்புக். இந்த பேஸ்புக்கை மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் இன்ஸ்டாகிராமுக்கு ஒரு பயனர்கள் கூட்டம் இருந்தாலும், அதேபோல் பேஸ்புக் தளத்திற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், தான் பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு தான், பப்புவா நியூ கினியா. இங்கு சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனதாகும். இங்குள்ள மக்கள் அதிகமாக பேஸ்புக்கை தான் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில், பேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி, பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக் தளத்திற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.