கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் அடுத்தடுத்து மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவ, பல்வேறு நாடுகள் தங்களது எல்லைகளை மூடியுள்ளன.
இந்தியாவிலும் ஓமைக்ரான் பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை ஒத்திவைப்பதாக , விமான போக்குவரத்துத் துறை முன்னரே அறிவித்தது.
இந்நிலையில் தற்போது சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்தானது, ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.