• Thu. Dec 12th, 2024

ஏற்றுமதி மாநாடு- தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” என்ற மாநாட்டைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டையும் வெளியிடுகிறார் முதல்வர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும்,இந்த மாநாட்டில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2,000 பேருக்கு பயிற்சியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. 240 கோடி ரூபாய் மதிப்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்களின் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.