களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்து சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா 1 லட்சமும் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாக தொழிற்சாலை வெடிவிபத்தில் ஐந்து பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று இலட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு இலட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தாவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.