• Fri. Mar 29th, 2024

கோடையில் வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு..,

Byவிஷா

Apr 27, 2023

கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மெட்ராஸ் பார் அசோசியேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்திடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *