இந்தி நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்தி சினிமாபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தானின் சிக்ஸ் சென்ஸ் போர்ட் ரிசார்ட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருமணத்தை முடித்து மும்பையில் தாங்கள் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு குடிபுகுந்துள்ளது கத்ரினா கைஃப் ஜோடி. இந்நிலையில் இவர்கள் திருமணத்தையொட்டி இவர்களது சினிமா நண்பர்கள் கொடுத்த திருமண பரிசுப் பொருட்கள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. சல்மான்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டவர்கள் கோடிக்கணக்கில் மதிப்பிலான பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக, இதுபோன்ற நட்சத்திரங்கள் திருமணத்திற்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்குவதை தனது வழக்கமாக கொண்டு உள்ளார் சல்மான் கான். அந்த வகையில் தன்னுடைய மிகவும் நெருங்கிய தோழியான கத்ரீனா கைஃப்பிற்கு அவர் தற்போது 3 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்துள்ளார். தன்னுடைய முன்னாள் காதலியான கத்ரினா கைஃப்பிற்கு பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூர் 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸை பரிசளித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஷாருக்கான் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பெயிண்டிங் ஒன்றை பரிசளித்துள்ளார். ரித்திக் ரோஷன் கத்ரினாகைஃப் மற்றும் விக்கி கெளசல் இருவருக்கும் நண்பராக உள்ளார். அவர் விக்கி கெளசலுக்கு3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். ஆலியா பட், கத்ரீனா -விக்கி ஜோடிக்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்ப்யூம் பாக்கெட் ஒன்றை பரிசளித்துள்ளார்.