

அம்மா பிறந்த நாளில் ஸ்டாலின் அரசை அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் சபதமேற்க வேண்டும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் பேசினார்.மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, மானாமதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அம்மா பேரவை துணை செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்,அம்மா என்றால் அன்பு, ஆற்றல், தைரியம். தமிழகத்தில் தலைவி என்றால் புரட்சித்தலைவி அம்மா தான். தலைவர் என்றால் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் தான். இவர்களின் ஒட்டுமொத்த உருவமாக உள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்து நம்மை வழிநடத்தி வருகிறார்.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நாட்டை சுரண்டி கொள்ளையடித்த ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்பி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் சபதமேற்க வேண்டும் என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் 350 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு இளங்கோ, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

