• Thu. Dec 12th, 2024

ஐநாவுக்கே போனாலும் வெற்றி இபிஎஸ்-க்கு தான்-ஜெயக்குமார்

Byகாயத்ரி

Jul 20, 2022

ஐநாவுக்கே போனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்தில் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் ஐநாவுக்கே சென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தான் வெற்றி கிடைக்கும் என்றும் அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.