• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

ByA.Tamilselvan

Jul 21, 2022

அதிமுக வட்டாரத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ந் தேதி நடந்தது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.