• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திலேயே வினோத நேத்திக்கடன் திருவிழா

ByG.Suresh

Jan 16, 2025

தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத ஆவாரம் பூ குப்பியினை முத்தூர் கிராமத்தில் சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் செய்யும் வினோத நேத்திக்கடன் திருவிழா.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வாசலில் பூசணிப்பு மாட்டுச்சாணத்தை தினந்தோறும் சிறு குப்பிகளில் சேகரித்து தை மாதம் மூன்றாம் நாள் குப்பிகளில் ஆவாரம் பூவினை வைத்து அவர்களது கிராம தேவதையான உச்சி காளியம்மன் கோவில் வீட்டிற்குள் கொண்டு வந்து விவசாயம் செழிக்க வேண்டிய உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அதன்பின் கிராம மக்கள் சிறுவர்கள் அனைவரும் இணைந்து கும்மி பாட்டுக்கு கும்மி அடித்து குலவை போட்டு ஆவாரம் பூ குப்பியினை தலையில் வைத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அச்சிறுவர்களே கோயில் குளத்தில் கரைத்து பின்னர் குளத்தில் நீர் எடுத்து கோவில் வீட்டிற்கு வந்து அபிஷேகம் செய்யும் வினோத திருவிழா நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.