
பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ள நிலையில் அதிமுகவில் அடுத்த திருப்பம் என்ன என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவும்,இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. ஓபிஎஸ்சை ஒதுக்கிவிட்டு, இபிஎஸ்லால் இனிஒன்றும் செய்யமுடியாது.இதனால் அதிமுகவில் நிலவி வந்த ஒற்றைத்தலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதால் மீண்டும் இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ஓபிஎஸ்- இபிஎஸ் சந்திப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
