அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவும்,இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. இதையடுத்து இபிஎஸ்சின் அடுத்தகட்ட நடிவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ளது.ஓபிஎஸ்சை ஒதுக்கிவிட்டு, இபிஎஸ்லால் இனிஒன்றும் செய்யமுடியாது.இந்நிலையில் இபிஎஸ் பக்கம் 90% பொதுக்குழு உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளதால் அடுத்த பொதுக்குழு எப்போது நடந்தாலும் அவர் மீண்டும் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு வருவார் என்கிறது இபிஎஸ் தரப்பு. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் தரவில்லை என்றாலும் கட்சி விதிப்படி 5 ல் 3 பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இபிஎஸ் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.