
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றடைந்தார். இதை அடுத்து நேற்று டெல்லி சென்றடைந்த அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி இருந்தார். இன்று காலை 10:30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து, 11:30 க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து உள்ளார். பின்னர் மாலை 4:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

