உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து அதிமுக இது திமுகவின் முறைகேடு என குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுகவினர் சந்திக்க உள்ளனர்.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலவுவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி முறையிடுவார் எனக் கூறப்படுகிறது.