• Mon. Dec 9th, 2024

ஷூ எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலியான சிறுவன்…

Byமதி

Oct 20, 2021

சென்னை திருவிக நகர் எஸ்ஆர்பி கோவில் தெரு வசிப்பவர் சத்யேந்திரன் – செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகன் 15 வயதான நிர்மல், 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தனியார் நீச்சல் அகாடமியில் பயிற்சிபெற்று வந்த நிர்மல், நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் வீட்டின் நான்காவது மாடிக்குச் சென்று ஷூ எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது நிர்மல் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்திருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட அவரது பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவருக்கு கால்கள், மார்பு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிர்மல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.