• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுரை வந்த ஓபிஎஸூக்கு உற்சாக வரவேற்பு

ByA.Tamilselvan

Aug 18, 2022

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின் மதுரை வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தேனி செல்வதற்காக மதுரைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, மானாமதுரை, இராமநாதபுரம் ,பரமக்குடி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்திருந்த தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் ஓ.பன்னீர்செல்வம் காரில் தேனிக்கு கிளம்பினார்.