சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு கொள்ளை போன 31.7 கிலோ தங்கமும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.